சமீபத்தில் சூப்பர் ஸ்டார் நடித்த ‘லிங்கா’ படத்தின் தெலுங்கு ஆடியோ வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த், ‘கதாநாயகர்களுக்கு கடவுள் கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை 60 வயதில் டூயட் பாட வைப்பதுதான்.
அதுவும் சோனாக்ஷி சின்ஹாவை எனக்கு குழந்தை முதல் தெரியும், எனது மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தர்யாவுடன் வளர்ந்தவர் சோனாக்ஷி. அவருடன் டூயட் பாடியது ரயிலின் கூரை மீது நின்று சண்டைக்காட்சியில் நடித்ததை விட கஷ்டமாக இருந்தது.
நான் அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமான போது முதல் காட்சி எடுக்கப்பட்டபோது இருந்த டென்ஷனை விட அதிகமாக சோனாக்ஷி மற்றும் அனுஷ்காவுடன் டூயட் பாடும்போது இருந்தது.
இந்த விழாவில் பேசிய சோனாக்ஷி ரஜினி சார் முன்னிலையில் ஜாக்கெட் இல்லாமல் நடித்த காட்சிகளில் எனக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது என்று கூறினார்.
















