கோத்தாபயவின் வெற்றியை தடுக்க அரசாங்கம் சூழ்ச்சி : அளுத்கமகே

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றியை தடுப்பதற்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர் பாரிய சதிகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

இன்னும் ஒரிரு நாட்களுக்கள் ஐக்கிய தேசிய கட்சியின் பிரபல்யமான நபர்கள் பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொள்வார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

சுதந்திர கட்சி, பொதுஜன பெரமுன இணைந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இராஜகிரியவில் உள்ள எதிரணியின் காரியாலயத்தில் இடம் பெற்றது. அதில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றிப் பெறும்.தற்போது 58 சதவீதமான வாக்குகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து இன மக்களும் இன, மத பேதங்களை துறந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் – முஸ்லிம் மக்களின் ஆதரவு தற்போது ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு என்று உறுதியாக்கப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் மீது நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்களை முன்னிலைப்படுத்தி தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்வதற்கான சூழ்ச்சிகள் தற்போது நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் முன்னெக்கப்பட்டு வருகின்றது என அவர் இதன்போது தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!