இலங்கைக் காவல்துறையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் UK தன்னார்வ தொண்டு நிறுவனம் குற்றச்சாட்டு

humanஇலங்கைக் காவல்துறையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக பிரித்தானிய தன்னார்வ தொண்டு நிறுவனமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.

3500 இலங்கை காவல்துறையினருக்கு ஸ்கொட்லாந்து மற்றும் பிரித்தானிய காவல்துறை பயிற்சி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

2007ம் ஆண்டு முதல் இந்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் சிரேஸ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஸ்கொட்லாந்தின் கோப்ரேட் வொட்ச் என்ற அமைப்பு இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்திருந்த தருணத்திலும் காவல்துறையினர் மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளது.

பல சந்தர்ப்பங்களில் ஸ்கொட்லாந்து அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்து பயிற்சி அளித்துள்ளனர். சில சந்தர்ப்பங்களில் இலங்கை காவல்துஐற உத்தியோகத்தர்கள் ஸ்கொட்லாந்திற்கு அழைத்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கைக் காவல்துறையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் ஸ்கொட்லாந்து கிளை குற்றம் சுமத்தியுள்ளது.

பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய படையினருக்கு காவல்துறையினர் ஒத்துழைப்பு வழங்கியதாகவும், காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்த கைதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

சட்டவிரோத கைதுகள், சி;த்திரவதைகள், பலவந்தமான காணாமல் போதல்கள் போன்ற சம்பவங்களுடன் காவல்துறையினருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றச் செயல்களுக்க தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

இலங்கைக் காவல்துறையினருடனான தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபையின் ஸ்கொட்லாந்து கிளை கோரிக்கை விடுத்துள்ளது.

Tags: , , ,

Leave a Reply