இராணுவ ஆக்கிரமிப்பையும் ஆதிக்கத்தையும் ஒழிப்பதற்கு வடக்கு தேர்தல் சிறந்த சந்தர்ப்பம்: மாவை

Mavai-Senathirajah1இலங்கை அர­சாங்­க­மா­னது சர்­வ­தே­சத்தின் முன்னால் குற்­ற­வாளிக் கூண்டில் நிறுத்­தப்­பட்­டுள்­ளது. இந்தச் சந்­தர்ப்­ப­மா­னது இலங்­கையில் தமிழ்த் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வை அடை­வ­தற்­கான இரா­ஜ­தந்­திரசந்­தர்ப்­ப­மா­கவும் வடக்கு உட்­பட தமிழ்­பேசும் மக்கள் தேசத்தில் இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்­பையும் ஆதிக்­கத்­தையும் ஒழிப்­ப­தற்­கான சிறந்த சந்­தர்ப்­ப­மா­கவும் அமைந்­துள்­ளது.

இந்தச் சந்­தர்ப்­பங்­களை மேலும் வலுப்­ப­டுத்­து­வ­தற்­காக வட மாகா­ண­சபைத் தேர்­தலில் கூட்­ட­மைப்பை மக்கள் ஆத­ரிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்­மைப்பின் செய­லாளர் மாவை சேனா­தி­ராஜா கோரிக்கை விடுத்­துள்ளார்.

தபால் மூல வாக்­கா­ளர்­க­ளுக்கு விடுத்­துள்ள வேண்டு­கோ­ளி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:

2013 செப்­டெம்பர் 21ஆம் நாள் நடை­பெ­ற­வுள்ள வடக்கு மாகாண சபைத் தேர்­தலில் வாக்­க­ளிக்கும் சந்­தர்ப்பம் தமிழ் பேசும் மக்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்­ளது.

கடந்த அறு­பது ஆண்­டு­களில் மாறி மாறி வந்த அர­சுகள்இ தமிழ்த் தேசிய இனத்தைப் பூண்­டோடு அழித்­து­விட எடுத்த நட­வ­டிக்­கை­களை விட 2009 மே 19ஆம் நாளுக்குப் பின் கடந்த நான்கு ஆண்­டு­களில் பேரி­ன­வாத மத­வாதக் கொள்­கை­க­ளுடன் ஆட்­சி­யி­லி­ருக்கும் அரசின் நட­வ­டிக்­கை­களும் நிகழ்ச்சி நிரலும் தமிழ்த்­தேச மக்­களின் வாழ்­வு­ரிமை, நில உரிமை, மக்­களை பாது­காக்­கு­மு­ரிமை, தம் நிலத்தில் தாம் ஆளும் அர­சி­ய­லு­ரிமை மற்றும் மனித உரி­மை­களை, ஜன­நா­யக அடிப்­படை உரி­மை­களை ஒழித்து விடும் தீவி­ர­வாத ஆட்­சி­யாக மட்­டு­மல்­லாமல், தமிழ்த்தசிய இனத்தின் இன, மண், மத அடை­யா­ளங்­க­ளையே அழித்து ஒழித்­து­விடும் சர்­வா­தி­கார ஆட்­சி­யா­கவே மாறி­விட்­டது. இப்­போது முஸ்லிம் மக்­களும், இஸ்லாம் மதமும் மிக மோச­மான அச்­சு­றுத்­த­லுக்­குள்­ளாகி வரு­கின்­றனர். இத்­த­கைய ஆட்­சியை நாம் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

இச் சந்­தர்ப்­ப­மா­னது இலங்­கையில் தமிழ்த் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வை அடை­வ­தற்­கான இரா­ஜ­தந்­திர சந்­தர்ப்­ப­மா­கவும் வடக்கு உட்­பட தமிழ் பேசும் மக்கள் தேசத்தில் இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்­பையும் ஆதிக்­கத்­தையும் ஒழிப்­ப­தற்கும் சிறந்த சந்­தர்ப்­ப­மா­கவும் உள்­ள­மையை முன்­வைக்­கின்றோம்.

இந்த இரா­ஜ­தந்­திர சந்­தர்ப்­பத்தை மேலும் வலுப்­ப­டுத்தும் பொருட்டு இத்தேர்தலில் ஜனநாயக சந்தர்ப்பத்தில் வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்குமாறும் இலங்கை தமிழரசுக் கட்சியின் சின்னமான வீட்டுக்குப் பக்கத்திலும் வாக்களிக்குமாறும் பணிவுடன் வேண்டுகிறோம்.

Tags: , ,

Leave a Reply