இலங்கையர்களுக்கு விசா வழங்குவதை இடைநிறுத்தியது சுவிஸ்?

இலங்கையர்கள் சுவிட்சர்லாந்து செல்வதற்கு விசா வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சிங்கள ராவய தேசிய அமைப்பின் பொதுச் செயலாளர் மாலகந்தே சுதத்த தேரர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றிய பெண் அதிகாரி ஒருவர் அண்மையில் கடத்தப்பட்ட சம்பவத்தை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு சுவிஸ் செல்வதற்கான அழைப்பு ஒன்று கிடைத்தது. அதற்கான ஆவணங்களை சுவிஸ் விசா நிலையத்தில் சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டது. அதற்கமைய நான் ஆவணங்களை சமர்ப்பிக்க சென்றேன். அங்கு இலங்கையர்களுக்கான விசா வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகளிடம் என்னிடம் கூறினார்கள்” என தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!