மனித மூளையை இணையம் மூலம் கட்டுப்படுத்தி அவர்களின் உடல் அசைவினை தீர்மானிக்கும் சோதனையொன்று அமெரிக்காவில் முதல் தடவையாக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வொஷிங்டன் பல்கலைக்கழகத்தில் அண்மையில் இச்சோதனையை ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளளனர். இந்த ஆராய்ச்சியின் மூலம் அடுத்தவரின் மூளையை மின்
சமிக்ஞைகள் ஊடாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அவரின் உடல் அசைவுகளைக் கட்டுப்படுத்தலாம் எனத் நிரூபிக்கப்பட்டுள்ளது.
கணனி விஞ்ஞானியும் பொறியிலாளருமான பேராசிரியர் ராஜேஷ் ராஓ தனது சக ஊழியரான ஸ்டொக்கோகோவின் மூளையை வொஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நடந்த சோதனையில் கட்டுப்படுத்தியுள்ளார்.
இதன்போது மின்வாய்கள் பொருத்தப்பட்ட தொப்பியை இருவரும் அணிந்துகொண்டு நேரடித்தொடர்புகள் எதுவுமின்றி தனித்தனியான கணனியில் அமர்ந்துள்ளனர். இவர்களது மின்வாய்களை மின்மூளைவரையத்துடன் (ஈ.ஈ.ஜீ) தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.
இக்கருவி மூலம் இணையத்தினூடாக ராஜேஷ் தனது மூளை சமிக்ஞைகளை ஸ்டொக்கின் மூளைக்கு அனுப்பி அதன் மூலம் அவரது வலது கையை வீடியோ கேம் விளையாட அசைத்து வெற்றிகண்டுள்ளார்.
இணையம் கணனிகளை இணைப்பதற்கான வழியாக இருந்தது. தற்போது அதுவே மூளைகளையும் இணைக்கக்கூடிய வழியாக உள்ளது என ஆராய்ச்சியில் பங்குபற்றிய அன்ரியா ஸ்டொக்கொ எனும் ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார். மூளையிலிருந்து அறிவைப்பெற்று அதனை நேரடியாக மூளைக்கு மூளை பரிமாற்ற வேண்டும்.
இத்தொழில்நுட்பம் எதிர்காலத்தில் அவசர நேரத்தில் அதாவது விமானத்தை தரையிறக்குவது போன்ற செயற்பாடுகளுக்கும் இது உதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
















