தொலைபேசி அழைப்பின் ஊடாக அறிமுகமாகிய சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நபரொருவரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி தம்புத்தேகம மஜிஸ்திரேட் சந்திரசிறி ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
கொஸ்கொட வதுரவெல பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதான குறித்த சிறுமி இராணுவத்தில் சேவையாற்றும் 21 வயதான இளைஞனொருவராலேயே வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
சிறுமியை முதன் முதலாக சந்திக்கும்பொருட்டு அவரது வீட்டுக்கு குறித்த சந்தேகநபர் சென்றுள்ளார்.
அங்கு சென்று சிறுமியுடன் சிறிது நேரம் கதைத்துக்கொண்டிருந்த சந்தேநபர் அவரை வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்.
சிறுமி அறிவு வளர்ச்சி குன்றியவரெனவும், சந்தேகநபர் சிறுமியின் பெற்றோரின் ஆசிர்வாதத்துடனேயே அவரை வீட்டிலிருந்து அழைத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
















