இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள்> ஊடகவியலாளர்கள் மற்றும் தன்னை சந்தித்த சமூக ஆர்வலர்கள் தாக்கப்படுகின்றமை குறித்து நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐநா மனித உரிமை பேரவையின் 24 ஆவது பருவகால அமர்வு இன்று ஆரம்பமானபோது இலங்கை குறித்து உரையாற்றிய நவநீதம்பிள்ளை இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்களை பாதுகாக்கும்படி அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மனித உரிமைகள் விடயம் குறித்து தான் ஐநா சபையுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
















