ஐ.நா உறுப்பு நாடுகள் இலங்கைக்கு எதிராக அதிருப்தியை வெளியிட்டுள்ளன

un-flagஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகள் இலங்கைக்கு எதிராக அதிருப்தியை வெளியிட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் இலங்கையின் விஜயத்தின் போது, அவரை சந்தித்த சிலர் அச்சுறுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தன.

மனித உரிமை விவகாரங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு அமெரிக்கா இலங்கைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 24ம் அமர்வுகளில் பங்கேற்ற பேரவையின் அமெரிக்க வதிவிடப் பிரதிநிதி எய்லீன் சம்பர்லெய்ன் டொனாஹ் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் அண்மைய இலங்கை விஜயத்தை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார். மனித உரிமை, ஜனநாயகம், நீதி போன்ற பல்வேறு விடயங்கள் நவனீதம்பிள்ளை நேரில் பார்வையிட சாத்தியம் கிட்டியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நவனீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்தை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றுள்ளது.உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

நவனீதம்பிள்ளையை சந்தித்தவர்களை அச்சுறுத்தியதாக சுமத்திய குற்றச்சாட்டுக்கள் குறித்து கவனம் செலுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நவனீதம்பிள்ளையை இலங்கையில் சந்தித்தவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் குறித்து ஜெர்மனியும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. நவனீதம்பிள்ளையை சந்தித்தவர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தப்பட்டமை குறித்து ஒஸ்ட்ரியாவும் கவலை வெளியிட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply