சண்டே லீடர் பத்திரிகையின் சிரேஸ்ட ஊடகவியலாளர் மந்தனா ஸ்மாயில் அபேவிக்ரமவின் வீட்டில் மீண்டும் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மந்தனா இலங்கை ஊடகவியலாளர் தொழிற் சங்கத்தின் தலைவி என்பது குறிப்பிடத்தக்கது. பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள அவரது வீடு உடைக்கப்பட்டுஇ கணனி களவாடப்பட்டுள்ளது.
வீட்டில் அலுவலக அறையாக பயன்படுத்திய பகுதி உடைக்கப்பட்டு கணனி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இரண்டாவது தடவையாக வீடு உடைக்கப்பட்டு கணனி களவாடப்பட்ட போது மந்தனாவின் குடும்பத்தினர் வீட்டில் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 24ம் திகதியம் மந்தனாவின் வீடு உடைக்கப்பட்டுஇ கொள்ளை முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















