ரிஐடி அழைப்பை நிராகரித்தார் சிவாஜிலிங்கம்!

பயங்கரவாத விசாரணை பிரிவில் நாளை முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்டிருந்த வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நிராகரித்துள்ளார்.

பயங்கரவாத விசாரணை பிரிவில் நாளைகாலை முன்னிலையாகுமாறு வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளைமுள்ளிவாய்க்கால் பகுதியில் கடந்த மே மாதம் முன்னெடுக்கப்பட்ட நினைவஞ்சலி தொடர்பில் அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலனுக்காக இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இனப்படுகொலை வாரமாக பெயரிட்டு நினைவு நிகழ்வுகளை கடந்த மே மாதம் 12ஆம் திகதி முதல் ஒரு வாரம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் நடத்தப்பட்டதன் ஊடாக, இனவாதத்தை தூண்டும் வகையில் சிவாஜிலிங்கம் செயற்பட்டதாக தெற்கு அரசியல்வாதிகள் மற்றும் மதத்தலைவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.

இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள சிவாஜிலிங்கம், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலன்களுக்காகவே அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக ஊடகங்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், உடல்நலக்குறைவு காரணமாக நாளைய தினம் பயங்கரவாத விசாரணை பிரிவில் முன்னிலையாக முடியாது என, அறிவித்துள்ளதாக எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!