நவியின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இராஜதந்திரிகளுக்கு பீரிஸ் விளக்கம்

periesஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீம்பிள்ளை இலங்கை அரசு மீது சுமத்தியிருந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு நேற்றுக் கொழும்பில் விளக்கமளித்துள்ளார்.

கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்களை அழைத்த அமைச்சர் பீரிஸ், அரசின் சார்பில் இந்தத் தெளிவுப்படுத்தும் கூட்டத்தை நடத்தினார். நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளின் முன்னேற்றங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கையை ஜனாதி பதியின் செயலாளர் லலித் வீர துங்க இந்தச் சந்திப்பின் போது இராஜதந்திரிகளுக்கு வழங்கியதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வடக்கு , வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும் அரிதாகச் சில இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் அவை பெரும் வன்முறைச் சம்பவங்கள் அல்ல எனவும் பீரிஸ் இங்கு கூறினார்.

விருப்பு வாக்குகளைப் பெறுவதற்கான ஆளும் கட்சியின் வேட்பாளர்களுக்கு இடையில் ஏற்படும் பொதுவான சம்பவங்கள் தொடர்பாகவே முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. எதிர்க் கட்சிகள் தீவிரமான பிரசாரங்களில் ஈடுபடாததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தேர்தலில் அரசின் அணுகு முறையானது வெளிப்படையாகவும் தெளிவானதுமாக உள்ளது.கடந்த முறை நடத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல் போல் இன்றி, இம்முறை தேர்தல் ஆணையாளர் வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை தேர்தலை கண்காணிக்க அழைத்துள்ளார்.

இந்தியாவில் இருந்து 5 பேரும், பாகிஸ் தானில் இருந்து 5 பேரும், பங்களாதேல் இருந்து 3 பேரும், நேபாளம், மாலை தீவுகளில் இருந்து தலா இரண்டு பேரும், ஆப்கானிஸ் தான் மற்றும் பூட்டான் நாடுகளில் இருந்து தலா ஒருவரும் தேர்தல் கண்காணிப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தெற்காசிய நாடுகளைக் கொண்ட இந்த வெளிநாட்டுக் கண் காணிப்பாளர் குழுவின் தலைவராக இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையாளர் என். கோபாலாசாமி நியமிக்கப்பட்டுள்ளார். என்றும் அங்கு கூறினார் பீரிஸ்.

Tags: , ,

Leave a Reply