கண்ணதாசனின் மொழிகளில் சில…

kannathasan1. தற்புகழ்ச்சி என்பது வேறொன்றுமில்லை. விற்பனையாகாத சரக்கிற்குச் செய்யப்படும் விளம்பரமே.

2. அறுந்துப் போன பட்டம் எங்கே போய் விழும் என்பதும், ஆத்திரக்காரன் கதை எதிலே முடியும் என்பதும் ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும்.

3. வாலிப வயதில் முட்டாளாக இருந்ததாக நான் இப்போது நினைக்கிறேன்.ஆனால் நடுத்தர வயதில் முட்டாளாக ஆவோம் என்று நான் அப்போது நினைத்ததில்லை.

4. மலரைப் பார் , கொடியைப் பார், வேர் எப்படி இருக்கும் என்று பார்க்க முயற்சிக்காதே.அதைப் பார்க்க முயன்றால், நீ மலரையும் கொடியையும் பார்க்க முடியாது.

5. ஒரு விடயத்தில், பிறரது அங்கீகாரத்தை நீ எதிர்பார்த்தால், அது நீ முழு அறிவோடு சிந்தித்த விடயமல்ல என்று பொருள்.

6. நிலத்தில் வளரும் களைகள் பெரிய மரங்கள் ஆவதில்லை.அற்ப ஆசைகள் பெரிய வெற்றியைத் தேடித் தருவதில்லை.

-கண்ணதாசன்.

Tags: ,

Leave a Reply