முகமது கஜினி என்றாலே, அதிகபட்சம் நம் நினைவுக்கு வருவது 17 முறை இந்தியாவின் மீது படை எடுத்து வெற்றி வாகை சூடியவர்.இவ்வளவு தான். நம்மை சொல்லி குற்றமில்லை.நமக்கு அப்படித்தான் கற்றுத்
தரப் பட்டது.
இந்த ஒரு வாசகத்தை மட்டும் நம் வரலாறு பாடம் நம் மண்டையில் ஏற்றி விட்டு தன்னம்பிக்கை தரும் வாசகமாக மாற்றியும் விட்டது.
உண்மையில் முகமது கஜினி அத்தனை முறை இந்தியாவின் மீது படையெடுக்க கரணம் என்ன? அந்தக் காரணம் தான் நம் மனதில் பசுமரத்தாணி போல் பதிக்கப் பட்டிருக்க வேண்டும்.பதிக்கப் பட்டதா இல்லையா என்பது உங்களுக்கே தெரியும்.
முகமது கஜினி மிகப் பெரிய கொள்ளைக்காரர். ஆப்கானித்தான் தான் இவரின் பிறப்பிடம்.கஜினியின் நோக்கம் இந்தியாவை கைபற்றி அதை ஆளவேண்டும் என்பது மட்டும் அல்ல.
உருவ வழிபாட்டை ஏற்காத அவர், அதை மேற்கொள்ளும் அனைத்து மதங்களையும் அழித்து அவர்களை மதம் மாற்ற வேண்டும் என்ற தீவிர மதவெறியில் இருந்தவர்.
அதையும் தாண்டி அவர் படையெடுப்பின் மிகப்பெரிய நோக்கம் இந்திய வளங்களை முக்கியமாக பழம்பெரும் கோவில்களில் உள்ள பெரும் செல்வங்களை கொள்ளையடிக்க வேண்டும் என்பதே.
இந்த கஜினியைத் தான் பள்ளிகாலத்தில் பலர் தங்கள் ஹீரோக்களாக கற்பனை செய்து கொண்டு, இந்த முறை தேர்வில் தோற்றால் என்ன அடுத்த முறை ஜெயிக்கலாம் என்று சொல்லிக்கொண்டு சுற்றி திரிந்தனர்.
கஜினியைப் பற்றி நம் பாடத்தில் மறைக்கப் பட்ட வரலாற்று உண்மைகள் இன்னும் எவ்வளவோ உண்டு.கஜினி வேண்டுமானால் நல்ல போர் வீரனாக இருக்கலாம் ஆனால் நல்ல மனிதனா என்பது கேள்விக்குறியே.
இந்த பதிவின் மூலம் நான் சொல்ல வருவது கஜினியை பற்றி மட்டுமல்ல, பாடத்திட்டத்தில் கூட அரசியல் ரீதியான முடிவுகள் தான் நிறைய நடந்திருக்கிறது.நாம் படித்த பாடங்களை இன்று நாமே திருப்பி பார்த்தால் இது போன்று எண்ணற்ற உதாரணங்கள் கிடைக்கும்.
சமூக அறிவியலில் கஜினி பாடத்தின் மூலம் நம் மனதில் பதிக்கப் பட்டிருக்க வேண்டியது ” இந்தியாவின் வளங்கள் எல்லாம் மேகங்களாய் திரண்டு உலகின் ஏதோ ஒரு மூலையில் மழையாக பெய்துகொண்டே இருக்கிறது என்பது தான் “.
நான் மேற்கோள் காட்டிய வரிகள் சரோஜினி நாயுடுவின் கவிதையிலிருந்து பெறப்பட்டது.
-ஆதிரா
















