அதிகாரங்களை பகிர்வதன் மூலமே தமிழர் உரிமைகளை உறுதிப்படுத்த முடியும் – இந்தியா

sudarsana-nachiappanஅதிகாரங்களைப் பகிர்வதன் மூலமே தமிழர் உரிமைகளை உறதிப்படுத்த முடியும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. இலங்கை வாழ் தமிழர்களின் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென இந்திய மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.

இலங்கை வாழ் தமிழர்கள் அரசியல் ரீதியாக போராடி தங்களது உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். இரண்டு தசாப்தங்களின் பின்னர் முதல் தடவையாக வடக்கில் தேர்தல் நடத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரங்கள் பகிர்ந்தளிக்காவிட்டால் தமிழர்கள் தங்களது உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனநாயக வழிகளிலேயே தமிழ் மக்களின் உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் பூரண ஆதரவளிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் பங்கேற்க வேண்டும் என்றே இலங்கைத் தமிழர்கள் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

வலுவான இந்தியாவின் மூலமே இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை சீனா நோக்கி நகர்வதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply