பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றும் தொழில்சார் விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் தமது தினசரி வாழ்விலும் விளையாட்டுக் களத்தில் போன்று வேகமாகவும் அர்ப்பணிப்புடனும் ஈடுபடுவது போன்ற காட்சிகளை ஜோர்டான் மெற்றர் என்பவர் புகைப்படமாக்கியுள்ளார்.
விளையாட்டு வீரர்களின் புகைப்படத் தொகுப்பினைத் தொடர்ந்து இதேபோன்று நடனக் கலைஞர்களின் புகைப்படத் தொகுப்பினையும் மேற்கொள்ள வுள்ளாராம் ஜோர்டன்.
பேஸ்போல் விளையாடு தனது சொந்த வாழ்க்கையில் ஏற்படுத்திய தூண்டுதலிலேயே இந்த புகைப்படத்தொகுப்பினை எடுத்ததாக ஜோர்டன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப் பாணி கால்பந்தாட்ட வீரர் ஒருவர் படுக்கையறையில் பந்துக்குப் பதிலாக தனது மனைவியை தூக்கி வைத்திருப்பது போலவும் சைக்கிளோட்ட வீராங்கனையொருவர் தனது சைக்கிளில் வீட் டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்வது போலவும் படகோட்ட வீராங்கனைகள் நீச்சல் குளத்தில் தோணிவலித்து செல்வது போலவும் ஜிம்னாஸ்டிக் வீரர் ஒருவர் வீதியிலுள்ள கம்பமொன்றில் தொங்குவதைப் போலவும் புகைப்படங்களைப் பிடித் துள்ளார் ஜோர்டான் மெற்றவர்.





















