பாடசாலை மாணவ, மாணவிகள் கைத்தொலைபேசி பாவிப்பதை தடை செய்ய வேண்டுமென கல்வி நடவடிக்கைகள் தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக்குழு பரிந்துரை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வகுப்புகளில் பாவிப்பதற்கென அனுமதிக்கப்பட்ட தொழில்நுட்ப உபகரணங்கள் தவிர்ந்த ஏனைய உபகரணங்களை பாடசாலைக்கு எடுத்து வருவதை தடுக்க வேண்டுமென்றும் அக்குழு தெரிவித்துள்ளது.
பாடசாலை பிள்ளைகள் பண்பாட்டுடனான கல்வியைப் பெறுவதற்கு பெற்றோர், ஆசிரியர் மற்றும் பெரியோர் முன்மாதிரியாகத் திகழ வேண்டுமெனவும் அக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
















