சமுத்திரங்களிலுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்யும் கருவி

see-cleanerநெதர்லாந்தைச் சேர்ந்த இளம் பொறியியில் மாணவன் ஒருவர் உலகின் சமுத்திரங்களிலுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்யும் கருவி ஒன்றினை கண்டுபிடித்துள்ளார்.

பொயன் ஸ்லட் என்ற 19 வயதான பொறியியல் மாணவனே இந்த சாதனத்தை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் 20 பில்லியன் தொன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றலாம் எனக் கூறப்படுகின்றது.

சமுத்திரங்களில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதுடன் அது கடல் வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக அமையாத வண்ணம் மீள்சுழற்சிக்குட்படுத்தக்கூடிய வகையிலேயே இந்த சமுத்திர சுத்திகரிப்பபான் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சுத்திகரிப்பானைப் பயன்படுத்தி சமுத்திரங்களிலுள்ள கணிசமான அளவிலான பிளாஸ்டிக் குப்பைகளையும் 5 வருடங்களில் நீக்கிவிடலாம் என ஸ்டல் நம்புகிறார்.

சமுத்திரங்களிலுள்ள பிளாஸ்டிக் குப்பைகளால் வருடாந்தம் மில்லியன் கணக்கான கடல் சார் உயிரினங்கள் இறக்கின்றன. ஆபத்தான பாசிகளை உருவாக்குதுடன் பரப்பவும் செய்கின்றன. இவற்றை அழிப்பதற்கு அரசுகளும் அமைப்புகளும் மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்களை ஒவ்வொரு வருடமும் செலவு செய்வதாக ஸ்லட் தெரிவித்துள்ளார்.

இச்சாதனம் தொடர்பில் ஸ்லட் தனது இணையத்தளத்தில் பகிர்ந்துகொண்டுள்ளதாவது, இது சமுத்திரத்தினை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாது பிளாஸ்டிக் மீள்சுழற்சியினால் வருடத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெறும் என நம்புகிறேன். இருப்பினும் இச்சாதனம் பரீட்சித்துபார்க்கப்பட வேண்டியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இச்சாதனத்தினை மேலும் மேம்படுத்துவற்காக பணத்தை திரட்ட த ஓசியன் க்ளீன்அப் எனும் அமைப்பை உருவாக்கியுள்ளார் மாணவரான ஸ்லட்.

Tags: , ,

Leave a Reply