வடபகுதியில் கூட்டமைப்புக்கு முதலமைச்சர் வேட்பாளர் இல்லை: பஷில்
விக்கினேஸ்வரனுக்கு பயப்படும் மகிந்த சகோதரர்களும் வடக்கு மக்களில் காட்டும் திடீர் பாசமும்
அபிவிருத்திமீது தமிழ் தேசியக்கூட்டமைப்பு அக்கறை கொண்டிருந்தால் வடக்கில் உள்ள ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக கூட்டமைப்பு தெரிவுசெய்திருக்கும் எனத் தெரிவித்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷஇ வடமாகாணத்தில் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற அபிவிருத்திப் பணிகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு சகல மக்களும் ஒன்றிணைந்து இந்த அரசாங்கத்துக்கு ஆணையை வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அக்கறையின்மையாலேயே இந்த நிலை காணப்படுகின்றது. இவர்களுக்கு அக்கறை இருந்திருந்தால் இப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு நன்கு அறிந்த ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நியமித்து இருப்பார்கள் எனத் தெரிவித்தார்.
வடமாகாணத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றால் வடக்கு மாகாணம் தெரிந்த ஒருவரை நியமித்திருப்பார்கள். தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என வடமாகாணத்திலுள்ள பிரதேச சபைகள், கிராம அலுவலர் பிரிவுகளில் தேடிய போது அவருடைய விலாசம் எமக்குக் கிடைக்கவில்லைஎனவும் குறிப்பிட்டார்
இறுதியாக இலங்கையில் எப்பகுதியில் இருக்கும் எனத் தேடிய போது கொழும்பு மாவட்டம் தேர்தல் தொகுதி ஒன்றில் தேடியபோது பொரளை கிராம அலுவலர் 182 பிரிவில் சிக்மன் கேம்பிரிஜ் பகுதியில் இல 16 ஊ யில் ஞானசபாபதி விக்கினேஸ்வரனின் அடையாள அட்டை இலக்கம் காணப்பட்டது. 4 இலட்சம் வாக்காளர் உள்ள
வடமாகாணத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு யாழ்ப்பாணத்தில் ஒருவரை முதலமைச்சராக நியமிக்க முடியாதுள்ளது என்றார்.
முடியுமானால் கூட்டமைப்பினரிடம் அராலி பாலம், தொண்டமானாறுபாலத்தில் எத்தனை வான் கதவுகள் உள்ளது எனக்கேட்டுப் பாருங்கள். அவர்களுக்குத் தெரியாது. ஆனால் எனக்கு அது நன்கு தெரியும். நான் தான் அங்கு சென்று புனரமைப்பு செய்தேன். யாழ்.குடாவில் எத்தனை தீவுகள் உள்ளன என முதலமைச்சர் வேட்பாளருக்குத் தெரியுமா? இதனால் வடக்கின் நியாய தர்மம் மீறப்பட்டுள்ளது எனவும் பசில் ராஜபக்ச சுட்டிக்காட்னார்.
















