வயதிற்கு ஒரு சவரன், என்ன உலகமிது?

girl9வயதோ 30,
வரதட்சணையோ 30 சவரன்,

கல்யாண சந்தையில் விலைபோக
வயதிற்கு ஒரு சவரன்.
என்ன உலகமிது?

பொன் நகைக்கு உள்ள மதிப்பு,
இந்த பெண் மனதிற்கு இல்லை.

பெண்ணாய் பிறக்க நானென்ன
வரம், கேட்டா வாங்கி வந்தேன்?

நகைதான் முக்கியம் வேண்டும்
என்றால், பெண் நான் எதற்கு?

நகைக்கடை பொம்மை
போதுமே உனக்கு!

நானும் காத்துக் கொண்டுதானிருக்கிறேன்…

நகை வேண்டாம் என்று சொல்லும்
ஆண்மகனுக்காக அல்ல,

அன்பான ஆறுதலுக்காகவும்,
எனைப் புரிந்து
கொள்ளும் ஆம்பளைக்காகவும் !!

– ஆனந்தி

Tags: 

Leave a Reply