சவூதி அரேபியாவில் படுகொலை குற்றச்சாட்டுக்குள்ளான ஒருவருக்கு புதன்கிழமை தலையை வெட்டி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சாலெம் பின் ஹஸன் அல் – -எஸ்ஸி என்ற மேற்படி நபர், தனது சகாவான ஓமர் பின் ஷமி அல் – ஷர்டி என்பவரை சுட்டுக் கொன்றமைக்காக மேற்படி மரணதண்டனை நிறைவேற்றத்திற்கு உள்ளாகியுள்ளார். அவருக்கு குன்பன்டாஹ் நகரிலுள்ள சிறைச்சாலையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. அவரது மரணதண்டனையுடன் சவூதி அரேபியாவில் இந்த வருடம் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் தொகை 66 ஆக உயர்ந்துள்ளது.
















