யுத்தம் இடம்பெற்ற காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமேன பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சிபோயின் மெக்டொனாஹ் தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக உலக வங்கியின் அண்மைய புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கில் இன்னமும் சிவில் நிர்வாகம் நிறுவப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை விவகாரங்களில் எதிர்பார்க்கப்பட்டளவு முன்னேற்றம் இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பாடாமை ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலைமை அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் நிலைமையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்குள் அமர்வுகளை இலங்கையில் நடாத்துவது எந்த வகையில் நியாயமானது னஎ அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இம்முறை அமர்வுகளை பிரித்தானிய அரசாங்கம் புறக்கணிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை விவகாரம் குறித்து வலுவான தீர்மானம் ஒன்றை எடுப்பதன் மூலம் அரசாங்கங்களினால் அச்சுறுத்தப்படும் ஏனைய நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை அளிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
















