அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிடுவோர் ஒடுக்கப்படுகின்றனர் – கெரத் தோமஸ்

closed-mouthஅரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிடுவோர் ஒடுக்கப்படுவதாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் கெரத் தோமஸ் தெரிவித்துள்ளார்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பேதம் பாராட்டாது அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் ஒடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தொடர்ந்தும் பாரியளவில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்று வருவரதாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையை சந்தித்தவர்கள் அச்சுறுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 12 மாதங்களில் முஸ்லிம்களின் வணக்கத் தளங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது 20 தடவைகள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை நிலைமைகளில் மேம்பாடு ஏற்படுத்தப்படாவிட்டால் அமர்வுகளில் பங்கேற்கப் போவதில்லை என கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் அறிவித்திருந்ததாகவும், இந்த நிலைப்பாட்டை ஏனைய பொதுநலவாய நடுகள் தலைவர்களும் பின்பற்ற வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிவில், அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளை உறுதிப்படுத்த பொதுநலவாய நாடுகள் அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

மனித உரிமை நிலைமைகள் குறித்து எந்தவிதமான அழுத்தங்களையும் இலங்கையின் மீது பிரயோகிக்காது பிரித்தானிய பிரதமர் அமர்வுகளில் பங்கேற்றால், அது இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தி ஊக்கப்படுத்துவதாகவே அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: ,

Leave a Reply