கொழும்புக்கு திரும்பி வரலாம் என விக்கி கனவு காணக்கூடாது; எச்சரிக்கிறது ராவண பலய

ravanaகொழும்புக்கு திரும்பி வரலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் விக்கினேஸ்வரன் கனவு காணக்கூடாது என ராவண பலய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர்களாக போட்டியிட்டு விட்டு சி.வி விக்கினேஸ்வரன் கொழும்புக்குத் திரும்பி வர முடியும் என்று விக்னேஸ்வரன் கனவு காணக் கூடாது என ராவண பலயவின் பொதுச்செயலர் இத்தெகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது,

வடமாகாண சபைத் தேர்தலுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

குறித்த விஞ்ஞாபனமானது இலங்கையின் அரசியலமைப்பை மீறும் வகையில் உள்ளதுடன் நாட்டின் இறைமைக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

மேலும் சமஸ்டிக் கட்டமைப்பின் கீழ் வடக்கு,கிழக்கு மாகாணங்களை இணைத்து, காணி, பொலிஸ், கல்வி, நிதி, சுகாதாரம் போன்ற அதிகாரங்களை கோரி தனியான நிர்வாகத்தை உருவாக்க விக்னேஸ்வரனும் அவரது குழுவினரும் வடக்கு தேர்தல் மூலம் முனைகின்றனர்.

இதேவேளை, வெளிநாட்டில் இருந்து நேரடியான கடன்களைப் பெற்றுக் கொள்வதற்கும் முனைகின்றனர். இது அரசியலமைப்புக்கு முரணானது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: , , ,

Leave a Reply