குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – ஐ.நா.

un-flagபாரிய குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியது மிகவும் அவசியமானது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் உண்மை, நீதி விவகார விசேட பிரதிநிதி பாப்லே டி கிரிப் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்ற திட சங்கற்பத்துடன் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியள்ளார்.

முரண்பாட்டு நிலைமைகளின் பின்னர் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல் மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்தல் மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை விவகாரம் குறித்து கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் டிசம்பர் மாதம் பாப்லே இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்;கப்படுகிறது,

ஐக்கிய நாடுகள் அமைப்புடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட விரும்புவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. நீதி பிரச்சினைகளுக்கு கிரமமான முறையில் தீர்வு காணும் முனைப்புக்களின் போது உலக சமூகம் யதார்த்தங்களை புரிந்து கொள்ள வேண்டுமென இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Tags: , ,

Leave a Reply