“வொயஜர் 1″ சூரியத் தொகுதியை கடந்து விட்டது: நாசா அதிகாரபூர்வ அறிவிப்பு

voyager“வொயஜர் 1″ என்ற ஆளில்லா விண்கலம் விண்ணிற்கு அனுப்பப்பட்டு சுமார் 35 ஆண்டுகள் கழித்து சூரியத் தொகுதியை விட்டு வெளியேறியுள்ளதாக நாசா அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.

வொயஜர் விண்கலமானது 1977ஆம் ஆண்டு விண்ணுக்கு ஏவப்பட்டது. வியாழன்இ சனி ஆகிய கிரகங்களை நன்கு ஆராய்ந்து அரிய பல படங்களையும் அனுப்பி தனது கடமையை செவ்வனே நிறைவேற்றியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மேலதிக வேலையாக வேற்றுக்கிரகவாசிகளை தேடி கடந்த 2012 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி சூரியனிலிருந்து சுமார் 1840 கோடி கிலோ மீட்டர் (இது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தைப் போல 122 மடங்கு) வரை சென்றிருந்தது.

இதனால் கடந்த மார்ச் மாதமளவில் வொயஜர் 1 விண்கலம் சூரியத் தொகுதியை விட்டு வெளியேறிவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் நாசா அதனை மறுத்துவிட்டது. இந்நிலையில் குறித்த விண்கலம் சூரியத் தொகுதியை கடந்துவிட்டதாக நாசா உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வொயஜர்-1 விண்கலத்தில் ஒரு இறுவட்டு (ஊனு) உள்ளது. இதில் ஞாயிற்றுத் தொகுதி குறித்த விடயங்களும் ஆண்இ பெண் உருவம்இ பூச்சிகள் விலங்குகளின் படங்கள்இ 35 மொழிகளிலான வாழ்த்துச் செய்தி மற்றும் பூமியிலுள்ள பல்வேறு வகையான இசை வடிவங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும் வொயேஜரில் மூன்று அணுசக்தி மினகலங்கள் (டீயவவநசநைள) உள்ளதாகவும் இவை 2025ஆம் ஆண்டு வரை தாங்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

Tags: ,

Leave a Reply