ஓய்வு பெறுகிறார் இளவரசர் வில்லியம்

williamsஇங்கிலாந்து ஆயுதப் படைகளில் ஏழாண்டுக்கும் மேலாகப் பணியாற்றிய இளவரசர் வில்லியம், இராணுவப் பணியிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக கென்சிங்டன் அரண்மனை அறிவித்துள்ளது.

இங்கிலாந்து விமானப் படையின் தேடுதல் மற்றும் மீட்புப் பணி விமானியாக பணியாற்றிய வில்லியம், கடந்த செவ்வாய்க்கிழமை தனது கடைசி பணி நாளை நிறைவு செய்தார்.

இராணுவப் பணியில் இருந்து விடுபட்டபிறகு, அரசுப் பணிகள் மற்றும் பொது சேவைகள் செய்வதில் வில்லியம் கவனம் செலுத்துவார் என அரண்மனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மேலும் அவர் சுற்றுச்சூழல், வனவிலங்கு பாதுகாப்பு போன்ற பணிகளிலும் கூடுதல் கவனம் செலுத்த உள்ளார்.

இளவரசர் வில்லியம், இளவரசி கேத்தரின் மற்றும் இளவரசர் ஜார்ஜ் ஆகியோர் இன்னும் சில வாரங்களில், இப்போது வசிக்கும் ஆங்கிள்சே வீட்டில் இருந்து கென்சிங்டன் அரண்மனைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: , ,

Leave a Reply