தமிழ் கட்சிகளுக்கு இடையில் மோதல்களை தூண்ட அரசாங்கம் முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. குறிப்பாக நுவரெலியா, மாத்தளை, கண்டி மாவட்டங்களில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் அரசாங்கம் மோதல்களை தூண்டி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் வாக்குகளை துண்டாடி தமிழ் பிரதிநிதித்துவத்தை குறைப்பதே அரசாங்கத்தின் சூழ்ச்சித் திட்டம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, ஐக்கிய தொழிலாளர் காங்கிரஸ் போன்ற கட்சிகள் வீதியில் இறங்கி மோதிக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியே தமிழ் மக்களுக்கு சரியான தீர்வுகளை வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
















