நாட்டு மக்கள் போலி வாக்குறுதிகளுக்கு ஏமாந்துள்ளனர் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களுக்கு ஆளும் கட்சியே முன்மாதிரியாக திகழ்கின்றது இந்த நாடு பின்நோக்கி நகர்ந்து செல்கின்றது.
மக்களின் வாழ்க்கைச் செலவு வெகுவாக உயர்வடைந்துள்ளது. நாட்டில் வாழும் 98 வீதமான மக்களின் எதிர்பார்ப்புக்கள் வீழ்ச்சியடைந்துள்ளன என அவர் சுட்டிக்காட்டியதுடன்,
அரசியல்வாதிகள் குறித்த மக்களின் நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளது. ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்களுக்கு அரசாங்கமே ஆதரவளித்து வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
















