பெண் பித்தராக மண்டேலாவை சித்தரிக்கும் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம்

mandelaநெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை வரலாற்றை கதையாகக் கொண்ட “ திரைப்படத்தில் அவரை ஒரு புனிதராக சித்தரிக்கவில்லை என அப்படத்தில் நெல்சன் மண்டேலா வேடத்தில் நடிக்கும் இத்ரிஸ் எல்பா தெரிவித்துள்ளார்.

“மண்டேலா லோங் வோக் டு ப்ரீடம்” எனும் இப்படத்தில் மண்டேலாவின் எதிர்மறையான பக்கமும் சித்தரிக்கப்படுகிறது. அவரின் வாழ்க்கையின் சிறந்த பக்கமும் எதிர்மாறான பக்கமும் காண்பிக்கப்படுவது முக்கியமானது என இத்ரிஸ் எல்பா கூறுகிறார்.

ஜஸ்டின் சட்விக் இயக்கும் இப்படத்தில், ஆரம்பக்காலத்தில் மண்டேலா பெண்பித்தராகவும் தனது முதல் மனைவியுடன் வன்முறையாக நடந்துகொள்வதாகவும் காணப்பட்டுள்ளார்.

“நான் எந்த வகையிலும் மண்டேலாவை அசிங்கப்படுத்த விரும்பவில்லை. ஆனால், நேர்மையற்ற வகையில் அவரை நான் காண்பிக்கவும் விரும்பவில்லை என நடிகர் எல்பா கூறினார்.

தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதியான மண்டேலாவின் வாழ்க்கை வரலாற்று நூலொன்றை அடிப்படையாக வைத்து இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

சுட்டத்தரணியாக அவர் வாழ்க்கையை ஆரம்பித்தமை, அரசியல் செயற்பாடுகள், 27 வருடகாலம் சிறையில் இருந்தமை, 1994 ஆம் ஆண்டு தேர்தல் மூலம் ஜனாதிபதியானமை ஆகியவற்றை விளக்குவதாக இப்படம் அமைந்துள்ளது.

Tags: , ,

Leave a Reply