இலங்கை தேர்தலை கண்காணிக்கும் பொதுநலவாய அமைப்பின் குழுவிற்கு கென்யாவின் முன்னாள் பதில் ஜனாதிபதி கலொன்சோ முஸ்யோகா தலைமை தாங்குகிறார்.
எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறுள்ள மாகாணசபைகளுக்கான தேர்தல் கண்காணிப்பு பணிகளில் இந்த குழுவினர் ஈடுபடவுள்ளனர்.
தேர்தல் கண்காணிப்பு பணிகளில் நால்வர் அடங்கிய குழுவினர் ஈடுபடவுள்ளதாக பொதுநலவாய அமைப்புக்களின் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.
இதேவேளை இந்தியா, பாகிஸ்தான், பூட்டான், நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவபடுத்தும் தேர்தல் கண்காணிப்பாளர்களும் இலங்கை வந்தடைந்துள்ளனர்.
















