ஆதரவு தாருங்கள்: ரஜினியை அழைக்கும் பா.ஜ.க

Rajini-kanthநடிகர் ரஜினிகாந்த்தை பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு அழைக்க பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாக அந்தக் கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 26ம் திகதி மோடி கலந்து கொள்ளும் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட திருச்சி வந்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பா.ஜ.,விற்கு ஆதரவு அளிக்கும் அரசியல் முடிவை ரஜினி எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த காலங்களில் திருச்சியில் மாநாடு நடத்தியதன் மூலம் திமுகவும், அதிமுக.,வும் அடுத்தடுத்து ஆட்சி அமைத்துள்ளதாகவும், தற்போது அந்த வாய்ப்பு பா.ஜ.,விற்கு கிடைத்துள்ளதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags: , , ,

Leave a Reply