“காணாமற்போன என் மகனைக் காட்டுங்கள். நான் மஹிந் தவைச் சந்தித்துக் கேட்கவேண்டும்” என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக் துரையப்பா விளையாட்டரங்கில் உரையாற்றிக் கொண்டிருந்த போது கதறினார் தாயார் ஒருவர். அவரை பாதுகாப்புப் பிரிவினர் மைதானத்தை விட்டு வெளியேற்றினர்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பரப்புரைக்காக யாழ். மாவட்டத்துக்கு நேற்று வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக், மாலை துரையப்பா விளையாட்டரங்கில் மக்கள் முன்னிலையில் உரையாற்றினார்.
இதன் போது, கூட்டத்திலிருந்த தாயொருவர், “”காணாமற்போன என் மகனைக் காட்டுங்கள். 4 வருடமாகக் காணவில்லை. மஹிந்தவைச் சந்தித்து இதனைக் கேட்கவேண்டும்” என்று கதறினார்.
ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினர் உடனடியாக அந்தத் தாயாரை மைதானத்தை விட்டு வெளியேற்றினர்.
















