புறக்கோட்டை போதிராஜமாவத்தை பகுதியில் ஆபாச வீடியோ படங்களை விற்பனை செய்தமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் வசமிருந்து 60 ஆபாச வீடியோக்கள் மற்றும் கனணி உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இருவரையும் இன்று (15) மாலிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாழைத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
















