மேர்வினின் திருமண ஆசை!

mervinsilvaaஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரும், நடிகையுமான கீதா குமாரசிங்கவை பார்க்கும் போது திருமணம் செய்ய ஆவலாக உள்ளதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அன்று தான் அவரை திருமணம் செய்திருந்தால் அவர் கீதார குமாரசிங்க இல்லை, கீதா சில்வா ஆகியிருப்பார் எனவும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

தேர்தல் மேடையொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மேர்வின் சில்வா ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையை திருமணம் செய்ய ஆர்வமாக உள்ளதாக தெரிவித்து அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply