சிரிய இரசாயன ஆயுத பயன்பாடு குறித்த ரஸ்ய அமெரிக்க உடன்பாட்டை வரவேற்பதாக பிரான்ஸ் அறிவித்தள்ளது. சிரியாவில் இடம்பெற்று வரும் சிவில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் முதல் கட்டமாக இந்த நடவடிக்கைகளை கருத முடியும் என பிரான்ஸ் ஜனாதிபதி பிரன்கோயிஸ் ஹொலண்டே தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் இராணுவ நடவடிக்கைகள் எடுக்கக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் அழுத்தம் பிரயோகிக்கப்படாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படக் கூடிய சாத்தியங்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இரசாயன ஆயுதப் பயன்பாடு குறித்து அமெரிக்காவும் ரஸ்யாவும் இணைந்து முன்வைத்த யோசனையை ஏற்றுக் கொண்டுள்ளது.
எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் சர்வதேச இரசாயன ஆயுத பிரகடனத்தில் கைச்சாத்திடுவதாக சிரிய அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இரசாயன ஆயுத பயன்பாடு குறித்த வாக்குறுதிகளை சிரியா மீறும் பட்சத்தில் சர்வதேச நாடுகள் இராணுவ தாக்குதல்களை நடத்த நேரிடும் என பிரான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதே நிலைப்பாட்டையே நட்பு நாடான அமெரிக்காவும் ஆரம்பத்தில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















