மும்பையில் இருந்து தமிழகம் திரும்பிய 5 பேருக்கு கொரோனா தொற்று!

மும்பையிலிருந்து புதுக்கோட்டை வந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கெனவே 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதில் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர்.

இந்நிலையில் கடந்த 18-ஆம் திகதி 36 பேர் மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வந்தனர். அதில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நாலு பேருக்கும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் புதுக்கோட்டையில் தனிமைப்படுத்தப்பட்டு முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!