நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலை மக்கள் புறக்கணிக்கக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வாக்காளர்கள் தேர்தல்களை புறக்கணிப்பது உசிதமாகாது. தேர்தலை புறக்கணிப்பது அரசாங்கத்திற்கு சாதகமான நிலைமையை தோற்றுவிக்கும்.
கடந்த காலங்களில் அரசாங்கம் அளித்த எந்தவொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. தேர்தலை புறக்கணிப்பதானது அரசாங்கத்திற்கு ஒட்சிசன் வழங்குவதற்கு நிகரானது என அவர் தெரிவித்துள்ளார்.
2014ம் ஆண்டில் புதிய அரசாங்கமொன்றை அமைக்கும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சி பாரியளவில் போராட்டங்களை நடாத்த உள்ளது.
அந்தவகையில் ஆட்டிசியிலுளள்ள இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் முதல் கட்டமாக 21ம் திகதி மாகாணசபைத் தேர்தல் அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
















