கள்ளத்தொடர்பை கண்டுப்பிடித்த மனைவி? கூகுல் மெப் மீது கணவன் போலிஸ் புகார்.. சுவாரஸ்யம்…

கூகுள் வரைபடம் உண்மைக்கு மாறான தகவல்களை காட்டுவதால் குடும்ப சிக்கல், குடும்ப வன்முறை, சித்திரவதை அதிகரித்து மன உளைச்சல் ஏற்படுவதாக தெரிவித்து பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் காவல் நிலையத்தை நாடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

மயிலாடுதுறை லால் பகதூர் நகரைச் சேர்ந்தவர் ஆர்.சந்திரசேகரன். இவர் மயிலாடுதுறை பெரிய கடைவீதியில் வணிக நிறுவனமொன்றை நடத்திவருகிறார். சந்திரகேரனின் மனைவி , அவர் தினமும் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியதும் அவரது செல்போனை வாங்கி, அதில் கூகுள் மப்-பின் யுவர் டைம் லைன் பகுதியை ஆராய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதில், கூகுள் மப் சந்திரசேகரன் செல்லாத இடங்களுக்குக் கூட சென்றுவந்ததாக காட்டியுள்ளது. இதனால் அவரது மனைவி தூக்கம் இல்லாமல் அதைப்பற்றிய சிந்தனையோடு இருந்து, அவர் மட்டும் பாதிக்கப்பட்டது மட்டுமன்றி, அவரது குடும்பத்தினரையே பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளார்.

மே மாதம் 20-ஆம் திகதி அவர் செல்லாத இடங்களுக்கு சென்றுவந்ததாக காட்டியதால் சந்தேகப்பட்டு, கணவரை விசாரித்துள்ளார்.

குடும்ப உறவினர்கள், மனநல மருத்துவர்கள் என பல தரப்பினரும் ஆலோசனைகள் கூறினாலும் அவரது மனைவி ஏற்றுக்கொள்ளவில்லை.

கூகுளை நம்பிய சந்திரசேகரனின் மனைவி அவரை நம்பத் தயாராக இல்லை. இதனால் பல்வேறு இன்னல்களை சந்தித்த சந்திரசேகரன், கூகுள் மப் பதிவுகளை இணைத்து, கூகுள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், நீதி வழங்கவும், நஷ்ட ஈடு கோரியும் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!