தீப்­பி­டித்த வீட்­டி­லி­ருந்து பூனையைக் காப்­பாற்­றிய சுப்பர் ஹீரோக்கள்

Batmanகதை­களில் வரும் சுப்பர் ஹீரோக்­க­ளான பெட்மேன் மற்றும் கெப்டன் அமெ­ரிக்கா ஆகிய இரு­வரும் இணைந்து எரிந்­து­கொண்­டி­ருந்த வீட்­டி­லி­ருந்து பூனை ஒன்றை காப்­பாற்­றிய சம்­ப­மொன்று அண்­மையில் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது.

அமெ­ரிக்­காவின் மில்டன் எனும் இடத்தில் கட்­டடம் தீப்­பி­டித்து எரிந்­துள்­ளது. இக்­கட்­டடத்­திற்கு அருகில் சிறு­வர்­க­ளுக்­கான நிகழ்­வொன்று இடம்­பெற்­றுள்­ளது. இதில் ஜோன் புக்லேண்ட் மற்றும் ட்ரோய் மார்கம் என்­ப­வர்கள் பெட் மேன் மற்றும் கெப்டன் அமெ­ரிக்கா ஆகி­யோரைப் போன்று உடை­ய­ணிந்து கலந்­து­ கொண்­டுள்­ளனர்.

இவர்­களில் பெட்மேன் வேட­மிட்­டி­ருந்த ஜோன் என்­பவர் முன்னால் தீய­ணைப்பு படை­வீ­ர­ராவார். இதனால் அருகில் தீப்­பற்­றி­யுள்­ளதை புகையின் நிறத்­தினால் அறிந்து அந்த இடத்­திற்கு இரு­வரும் விரைந்­துள்­ளனர். இதன்­போதே எரிந்த வீட்டில் சிக்­கி­யி­ருந்த பூனைனை இவர்கள் காப்­பாற்­றி­யுள்­ளனர்.

சம்­பவம் இடம்­பெற்ற வேளையில் வீட்டு உரி­மை­யா­ளர்கள் அங்­கி­ருக்­க­வில்லை. இதனால் எவ­ருக்கும் காயங்­களோ உயி­ர­பத்தோ ஏற்­ப­ட­வில்லை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இச்­சம்­பவம் இடம்­பெற்ற இடத்­தி­லி­ருந்த சிறு­வர்கள் நிஜ­மா­கவே இது பெட்மேன் என நம்­பி­யுள்­ளனர்.

Tags: , ,

Leave a Reply