சென்னை உள்ளிட்ட இந்தியாவின் மாநகரங்களில் 5 முதல் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரில் 85 சதவீதம் பேர் கையடக்க தொலைபேசி பயன்படுத்துவதாக தொழில் துறை அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இவர்களில் பலர் ஐபாட், மடிக் கணனி ஆகியவற்றை உபயோகிப்பதாக கூறப்பட்டுள்ளது.
சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், புனே, அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர் நகரங்களில் நடந்த ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
இந்த நகரங்களில் வசிக்கும் குழந்தைகளில் 63 சதவீதத்தினர் கணினியை பயன்படுத்தத் தெரிந்து வைத்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
















