ஒரே நாளில் 137 புதிய தொற்றாளர்கள்! – இலங்கையை அதிர வைத்த கொரோனா

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 137 பேர் நேற்று மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றிரவு 11.30 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் வெளியிடப்பட்ட தகவலின்படி, கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 1,319 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளில் ஒரே நாளில் மிக அதிகளவானோர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று அடையாளம் 137 நோயாளிகளில் 129 பேர் குவைத்திலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் எனவும், 08 பேர் கடற்படையினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திலிருந்து நாடு திரும்பி வந்தவர்களில் இதுவரை 219 பேர் கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!