அமெரிக்க கடற்படைக் கட்டடத்தில் துப்பாக்கிச் சூடு: 12 பேர் பலி

us-navyஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள கடற்படை தளத்தில் புகுந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 12 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் பலர் காயமடைந்துள்ளதாக வாஷிங்டன் பொலிஸ் தலைமை அதிகாரி கேத்தி லானியர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் உறுதிபடுத்தியுள்ளார்.

´´கடற்படையின் கடல் முறைமை கட்டுப்பாட்டு தலைமையகத்தில்´´ தாக்குதல் நடத்திய ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் கூறுகிறார்கள்.

மூன்று பேர் இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இருவர் இன்னமும் ஒழிந்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இவர்களில் எவரும் படையைச் சேர்ந்தவர்கள் அல்ல.

இரு பொலிஸ்காரர்கள் உட்பட 10 பேர்வரை அங்கு சுடப்பட்டதாக பொலிஸர் கூறுகிறார்கள். ஆட்கள் இறந்திருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறும் பொலிஸார் மேலதிக விபரங்களை தரவில்லை. நான்கு பேர் இத்தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் ஒருவர் டுவீட் செய்துள்ளார்.

மூவாயிரம் பேருக்கும் அதிகமானோர் பணியாற்றும் அந்தக் கட்டிடத்தில், உள்ளேயே மறைந்திருக்குமாறு பணியாளர்கள் கேட்கப்பட்டிருக்கிறார்கள். தாக்குதல் நடந்த இடத்தில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நகரின் பாதுகாப்பும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply