இலங்கை தொடர்பான பயண எச்சரிக்கையில் மாற்றமில்லை – பிரித்தானியா

uk-flagபிரித்தானியாவின் இலங்கை தொடர்பான பயண எச்சரிக்கையில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்ளும் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் திட்டமிட்ட மற்றும் ஆயுதக் குழுக்கள் கடத்தல்களில் ஈடுபட்டு வருவதாக பயண வழிகாட்டல் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 12ம் திகதி இந்த அறிக்கை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடைபெறவுள்ள நிலையில் இந்த பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் நடைபெறவுள்ள காரணத்தினால் இலங்கைக்கு பயணம் செய்யும் போது தடைகளை எதிர்நோக்க நேரிடலாம் என சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வீதித்தடைகள், திடீர் சோதனைகள், பாதை மூடல்கள் உள்ளிட்ட பல்வேறு தடைகள் ஏற்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Tags: , , ,

Leave a Reply