தேர்தலில் வெற்றி பெற்றால் மாகாண அபிவிருத்தி – மீன்பிடி பிரச்சினை குறித்து இந்தியாவுடன் பேச்சு நடத்தப்படும் – TNA

sumanthiran1எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால், மாகாணத்தின் அபிவிருத்தி, மீன்பிடி பிரச்சினை ஆகியவற்றுக்கு தீர்வுகாண இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்திய மீனவர்களால் வடபகுதி மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினை குறித்து ஏற்கனவே இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு நாடுகளின் மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண ஆழ்கடல் பகுதிகளில் அவர்களை மீன்பிடியில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும் என மன்மோகன் சிங் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக மீனவர்களுக்கு இந்தியா ஆழ்கடல் மீன்பிடி படகுகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பு வடக்கு தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply