3 வாகனங்களுடன் மோதிய கூகுள் கார்

Google-carகூகுள் நிறு­வ­னத்தின் கூகுள் ஸ்ரீட் வியூ காரொன்று இந்­தோ­னே­ஷி­யாவில் மூன்று வாக­னங்­க­ளுடன் மோதி­யுள்­ளது.

உலகின் ஒவ்­வொரு நக­ரத்­தி­னதும் வீதி­களின் வரை­ப­டங்­க­ளையும் “கூகுள் ஏர்த்” தயா­ரிப்­ப­தற்­காக கூகுள் ஸ்ரீட் வியூ காரில் பொருத்­தப்­பட்ட கமெ­ராக்கள் மூலம் படம்­பி­டிக்கும் நட­வ­டிக்­கையை கூகுள் நிறு­வனம் மேற்­கொண்டு வரு­கி­றது. மறு­புறம் சார­தி­யற்ற கார்கள் தொடர்­பான சோத­னை­யிலும் கூகுள் நிறு­வனம் தீவி­ர­மாக உள்­ளது.

இந்­நி­லையில் இந்­தோ­னே­ஷி­யாவின் ஜகார்த்தா நகரில் கூகுள் ஸ்ரீட் வியூ காரொன்று மூன்று வாக­னங்­க­ளுடன் மோதி­யுள்­ளமை பலரின் கவ­னத்தை ஈர்த்­துள்­ளது.

இக்கார் முதலில் பஸ் ஒன்­றுடன் மோதி­ய­தாக இந்­தோ­னே­ஷிய பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

பஸ்ஸின் சாரதி கோப­ம­டைந்து திட்­டி­யதால் பதற்­ற­ம­டைந்த காரின் சாரதி அங்­கி­ருந்து வேக­மாக நகர முற்­பட்­ட­போது மேலும் ஒரு பஸ்­ஸு­டனும் லொறி­யு­டனும் அக்கார் மோதி­ய­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இவ்­வி­பத்து இடம்­பெற்­றதை கூகுள் நிறு­வ­னத்தின் இந்­தோ­னே­ஷி­யா­வுக்­கான தொடர்­பாடல் தலைவர் விஷ்ணு மஹ்முட் உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார். “இவ்­வி­பத்தை நாம் தீவி­ர­மாகக் கரு­து­கிறோம்.

இவ்­வி­டயம் குறித்து உள்ளூர் அதி­கா­ரி­க­ளுடன் நாம் நெருங்கிச் செயற்­ப­டு­கிறோம்” என அவர் அறிக்­கை­யொன்றில் தெரி­வித்­துள்ளார்.

இவ்­வ­ருட முற்­ப­கு­தியில் பொட்ஸ்­வா­னாவில் கழு­தை­யொன்றை கூகுள் ஸ்ட்ரீட் வியூ காரொன்று மோதித் தள்ளியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. எனினும் அக்குற்றச்சாட்டை கூகுள் நிறுவனம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: ,

Leave a Reply