கஞ்சாவை கீரை போன்று அரிந்து கைதிக்கு வழங்க முற்பட்ட மனைவி

arrestகஞ்­சாவை கீரை­யாக அரிந்து சோற்­றுடன் வைத்துப் பார்­ச­லாக்கி சிறை­யி­லுள்ள தனது கண­வ­ருக்கு கொடுக்க முற்­பட்ட பெண்­ணொ­ரு­வரை கைது செய்­துள்­ள­தாக காலி பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

இந்துருவையைச் சேர்ந்த பெண்­ணொ­ரு­வரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வ­ராவார்.

கஞ்சா வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்­டுக்­காக விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த கண­வ­ருக்கு எடுத்­துச்­சென்ற உணவுப் பார்­சலில் கஞ்­சாவை கீரை போல் அரிந்து வைத்து கொடுக்க முயற்­சித்­த­போது சிறைச்­சாலை அதி­கா­ரி­க­ளினால் கைது செய்யப்பட்ட இப்பெண் காலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Tags: , , ,

Leave a Reply