கோவிட்-19: அதிகபட்சமாக ஒரேநாளில் 11,320 பேர் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) அதி உச்ச பட்ச எண்ணிக்கையாக ஒரே நாளில்11 ஆயிரத்து320 பேர் புதிதாக வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்காரணமாக மொத்தமாக வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 09ஆயிரத்து 603 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் 389 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8ஆயிரத்து 890 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்போது வரையில் 1 இலட்சத்து 54 ஆயிரத்து 231 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதுடன் 1 இலட்சத்து 46 ஆயிரத்து 482 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு சிகிச்சைப்பெற்று வருபவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!