இலங்கையின் தெற்கை பீடித்துள்ள TNA காச்சல் – தூக்கமின்மையால் அவதியுற்று புலம்பும் கடும் போக்காளர்கள்.

South-tna“பிரபாகரனின் மக்களை உடனடியாக மாற்ற முடியாது” ஒரே பார்வையில்…

TNAயின் தேர்தல் கொள்கை விளக்க அறிக்கையை விமர்சிக்க போவதில்லை தோற்கடிப்பதே அதற்கான தீர்வு – டளஸ் அழகப்பெரும

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கொள்கை விளக்க அறிக்கையை விமர்சிக்க போவதில்லை எனவும் அந்த கொள்கை விளக்கத்திற்கு வழங்க வேண்டிய சிறந்த தீர்வு அதனை முன்வைத்த வடக்கில் அந்த கூட்டமைப்பை தோற்கடிப்பதாகும் என அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இவ்வாறான கொள்கை விளக்கத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யுத்தம் முடிவடைதற்கு முன்னரும் முன்வைத்துள்ளது. 2009 ஆம் ஆண்டு போருக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் அது தோற்கடிக்கப்பட்டது.

அந்த கொள்கை தோற்கடிக்கப்பட்ட பின்னர் சயனைட் குப்பிக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. சயனைட் குப்பிக்கு ஓய்வு வழங்கப்பட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் அதனை பெற்றுக்கொடுக்க முயற்சித்து வருகிறது.

முழு நாடும் ஐக்கியப்படுத்தப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் அப்படியான நிலைமை ஏற்பட எந்த விதத்திலு; இடமளிக்கப்பட மாட்டாது. 30 வருடகாலம் போரில் துன்பங்களை அனுபவித்த மக்களின் உதவியுடன் கூட்டமைப்பின் கொள்கை விளக்கத்தை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அழப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள தேர்தல் கொள்கை விளக்கம் இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறியது என அறிவிக்க நீதிமன்றில் வழக்கு

வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள தேர்தல் கொள்கை விளக்கமானது இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறியது என அறிவிக்குமாறு கோரி தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி பிரிவினைவாத்தை தூண்டுவது, அதற்கு துணைபோவது, தனிநாடு கோருவது என்பது தண்டனைக்குரிய குற்றங்களாகும் என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு தொடர்பாக நீதிமன்றம் தெளிவுப்படுத்தும் வரை வடக்கு மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் எனவும் குணதாச அமரசேகர கோரிக்கை விடுத்துள்ளாhர்.

மனுவில் பிரதிவாதிகளாக இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாண சபையை கைப்பற்றி வடக்கில் பிரிவினைவாத நடவடிக்கைகளை எடுக்க முயன்றால் அதற்கு இடமளிக்கப் போவதில்லை:-

வடக்கு மாகாண சபையை கைப்பற்றி வடக்கில் பிரிவினைவாத நடவடிக்கைகளை எடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சித்தால் அதற்கு எந்த வகையிலும் இடமளிக்க போவதில்லை என சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்று ஆளுநருக்கு எதிரான யோசனை ஒன்றை கொண்டு வந்து நிறைவேற்றுவதே கூட்டமைப்பின் நோக்கம் என புலனாய்வு பிரிவினருக்கு தெரியவந்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் கூடிய அதிகாரங்களை பெறுவதை தடுக்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலமைச்சர் வேட்பாளரான அங்கஜன் இராமநாதன் கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழீழம் உருவாவதை தடுக்க கூட்டமைப்பு ஆட்சியமைக்க இட­ம­ளிக்கக் கூடாது: விமல் வீரவன்ச

சர்­வ­தேச ரீதியில் அப­கீர்த்தி வந்­தாலும் பர­வா­யில்லை. 13ஆவது திருத்தச்சட்­டத்தின் முழு அதி­கா­ரங்­க­ளுடன் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பை வட மாகா­ணத்தில் ஆட்­சி­ய­மைக்க ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ இட­ம­ளிக்கக் கூடாது. வடக்கில் சுயாட்சி ஏற்­பட ஆளும் கட்­சியின் பங்­கா­ளி­களும் பிரி­வி­னை­வா­தி­க­ளுக்கு உத­வி­களைச் செய்­கின்­றனர் என்று தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான விமல் வீர­வன்ச தெரி­வித்தார்.

13 ஆவது திருத்தச் சட்­டத்தில் காணப்­ப­டு­கின்ற பொலிஸ்இ காணி மற்றும் மாகா­ணங்­களை ஒன்­றாக இணைக்கும் அதி­கா­ரங்­களை வட மாகாண சபை தேர்­த­லுக்கு முன்னர் இல்­லா­தொ­ழிக்­கு­மாறு வலி­யு­றுத்­தப்­பட்ட போதிலும் ஆளும் தரப்­பிற்குள் இருந்த பல­ரினால் அதற்கு தடை விதிக்­கப்­பட்­டது. ஆனால் வட மாகாண சபையின் தேர்­தலின் பின்னர் கூட்­ட­மைப்­பி­னரடம் ஆட்சி போனால் வடக்கில் தனி சுயாட்சி ஏற்­படும் அச்­சு­றுத்தல் தொடர்பில் தற்­போது யாரும் பேசு­வ­தில்லை எனக் குறிப்பட்டார்.

தூத­ர­கங்­களை ஆல­யங்­க­ளாக கருதி வழி­ப­டு­ப­வர்­க­ளிடம் தேசப்­பற்றை எதிர்­பார்க்க முடி­யாது. மூன்று மாகா­ணங்­க­ளிலும் தேர்தல் நடை­பெ­று­கின்­றது. ஆனால் இந்த மாகாண சபை தேர்­தலில் பிர­தான கட்­சிகள் எவையும் விஞ்­ஞா­ப­னத்தை வெளி­யி­ட­வில்லை. ஆனால்இ தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வட மாகாண தேர்­த­லுக்­கான தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை வெளி­யிட்­டுள்­ளது. இத் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பிட்­டுள்ள விட­யங்­க­ளா­னது தனி தமி­ழீ­ழத்­திற்­கான முன்­னெ­டுப்­புக்­க­ளாகும் என்றார்.

இந்த கொள்­கை­யுடன் கூட்­ட­மைப்பு வடக்கில் வெற்றி பெற்றால் தமது தமி­ழீழ கொள்­கை­க­ளுக்கு மக்கள் ஆணை வழங்கி விட்­டார்கள் எனக் கூறி சர்­வ­தே­சத்தின் கவ­னத்தை மேலும் வலு­வான நிலையில் பெற்று நாட்டை பேரா­பத்தில் தள்ளி விடும் சூழலே காணப்­ப­டு­கின்­றது. இதற்­காக விக்கி­னேஸ்­வரன் உள்­ளிட்ட கூட்­ட­மைப்­பினர் வெள்­ள­வத்­தை­யிலும் கூட்­டங்­களை நடத்தி மூன்றிலிரண்டு பெரும்­பான்மை ஆத­ரவைக் கோரு­கின்­றனர் எனவும் குறிப்பட்டார்.

அது மட்­டு­மன்றி தற்­கா­லிக அடை­யாள அட்­டை­க­ளையும் குறிப்­பிட்ட சில அதி­கா­ரி­க­ளுடன் இணைந்து கூட்­ட­மைப்பு வழங்­கு­கின்­றது. இது குறித்து தேர்­தல்கள் ஆணை­யாளர் கவனம் செலுத்த வேண்டும். இவர்­களின் பிரி­வி­னை­வாத நிகழ்ச்சி நிரலை வலுப்­ப­டுத்­தவே ஐ. நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை இலங்கை வந்தார் எனவும் தெரிவித்தர்ர.

புது மாத்­தளன் முள்­ளி­வாய்க்கால் போன்ற பகு­தி­க­ளுக்கு விஜயம் செய்த பின்னர் அங்­குள்ள பொது­மக்­களை சந்­தித்து நவ­நீதம் பிள்ளை பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி கிடைக்க தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்துவேன் என உறுதியளித்துள்ளார் எனக் குpப்பிட்டார்.

ஆகவேஇ நிலைமை மோசமாகவே உள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக தனது முழு அதிகாரத்தையும் வடக்கிற்கு பிரயோகித்து தமிழீழம் உருவாவதை தடுக்க வேண்டும். அதேபோன்று கூட்டமைப்பை ஆட்சி செய்ய இடமளிக்கக்கூடாது எனக் கூறினார்.

பிரபாகரனின் மக்களை உடனடியாக மாற்ற முடியாது: உள்ளக சுயநிர்ணய உரிமையை வழங்கினாலும் நாடு பிரியும்: நிமால் சிறி­பால டி. சில்வா

சையன் குப்பியைக் காட்டி ஈழக் கனவை உருவாக்கிய மக்களை உடனடியாக மாற்ற முடியாது. வட மாகாண சபைத் தேர்­தலை முன்­னிட்டு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்புமுன்­வைத்­துள்ள தேர்தல் விஞ்­ஞா­ப­ன­மா­னது நாட்டை பிரிக்கும் முயற்­சிக்கே வித்­திட்­டுள்­ளது. உள்­ளக சுய­நிர்­ணய உரி­மையை வழங்­கி­னாலும் அதன் மூலமும் நாடு பிரியும் என்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உப தலை­வரும் அமைச்­ச­ரு­மான நிமால் சிறி­பால டி. சில்வா தெரி­வித்தார்.

எவ்­வா­றெ­னினும் தேர்­தலின் பின்னர் கூட்­ட­மைப்பு நாட்டை பிரிக்கும் முயற்­சியில் ஈடு­பட்­டாலோ அல்­லது தேசிய ஒரு­மைப்­பாட்­டுக்கு குந்­தகம் ஏற்­படும் வகையில் செயற்­பட்­டாலோ அதனை தடுப்­ப­தற்­கான மருந்து எம்­மிடம் இருக்­கின்­றது. அந்த மருந்தை உரிய நேரத்தில் உரிய வகையில் நாம் பயன்­ப­டுத்­துவோம் என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

வடக்­கிலும் வெற்­றி­பெ­றவே ஆளும் கட்சி எதிர்­பார்க்­கின்­றது. எனினும் மக்­களின் தீர்ப்பு எவ்­வாறு அமை­கின்­றதோ அதனை ஜன­நா­யக ரீதியில் ஏற்­றுக்­கொள்ள நாங்கள் தயா­ராக இருக்­கின்றோம் என்றும் அவர் கூறினார்.

நாட்டின் தேசிய ஒரு­மைப்­பாட்டை சீர் குலைப்­ப­தற்கோ அல்­லது நாட்டை இரண்­டாக உடைப்­ப­தற்கோ தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முயற்­சிக்­கு­மானால் அதனை தடுப்­ப­தற்கு என்ன செய்­ய­வேண்டும் என்று எங்­க­ளுக்குத் தெரியும். அதற்குத் தேவை­யா­னதை உரிய நேரத்தில் உரிய முறையில் நாங்கள் முன்­னெ­டுப்போம். எனவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் செயற்­பா­டுகள் குறித்தோ அதன் முத­ல­மைச்சர் வேட்­பா­ளரின் கூற்­றுக்கள் குறித்தோ நாங்கள் குழப்பம் அடை­ய­வேண்­டி­ய­தில்லை. தேவை­யான நேரத்தில் என்ன செய்­ய­வேண்டும் என்று எங்­க­ளுக்கு நன்­றா­கவே தெரியும் எனவும் தெரிவித்தர்ர.

மேலும் வாக்­கு­களை பெறு­வ­தற்­காக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இவ்­வாறு இன­வாத கூற்­றுக்­களை வடக்கில் வெளி­யிட்­டு­வ­ரு­கின்­றது. இதனை மக்கள் புரிந்­து­கொள்­வார்கள். எனவே மக்கள் இதனை ஆத­ரிக்­கின்­றார்­களா? என்­ப­தனை பார்க்­க­வேண்டும். காரணம் தேர்தல் காலத்தில் இவ்­வாறு மக்­களின் உணர்­வு­களைத் தூண்டி வாக்­கு­களை பெறும் முயற்­சிகள் வடக்கில் மட்­டு­மல்ல தெற்­கிலும் இடம்­பெ­று­வது வழக்­க­மாகும் என்றார் அவர்.

ஆனால் வாக்­கு­களை பெற­வேண்டும் என்ற நோக்­கத்தைத் தாண்டி தேர்­தலின் பின்­னரும் கூட்­ட­மைப்பு இவ்­வா­றான நாட்டை துண்­டாடும் வகை­யி­லான செயற்­பாட்டில் ஈடு­பட்டால் அதற்கு என்ன மருந்து வழங்­க­வேண்டும் என்று எங்­க­ளுக்கு நன்­றாக தெரியும். மேலும் மக்­க­ளுக்கு உண்­மையும் யதார்த்­தமும் நன்­றாக தெரியும். எனவே அவர்கள் சிந்­தித்து தேர்­தலில் முடி­வெ­டுப்­பார்கள். மக்கள் புத்­தி­சா­லித்­த­ன­மா­ன­வர்கள் எனக் குறிப்பட்டார்.

நாட்டின் அர­சி­ய­ல­மைப்­பையும் இறை­மை­யையும் தாண்டி எவரும் செயற்­பட முடி­யாது. அவ்­வாறு யாரா­வது செயற்­பட்டால் அதற்கு என்ன செய்­ய­வேண்டும் என்று எங்­க­ளு­ககுத் தெரியும். இது குறித்து தற்­போது குழப்­பம­டை­ய­வேண்­டி­ய­தில்லை. மருந்து எம்­மிடம் உள்­ளது எனவும் எச்சரித்தார்.

காரணம் எமக்கு உள்ள அனு­ப­வங்­க­ளின்­ப­டியும் எமக்­குள்ள அறி­வின்­ப­டியும் பார்க்­கும்­போது வட மாகாண சபைத் தேர்­தலை முன்­னிட்டு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முன்­வைத்­துள்ள தேர்தல் விஞ்­ஞா­ப­ன­மா­னது நாட்டை பிரிக்கும் முயற்­சிக்கே வித்­திட்­டுள்­ளது என்றார்.

அத்­துடன் தற்­போது அவர்கள் உள்­ளக சுய­நிர்­ணய உரிமை குறித்து பேசி­யுள்­ளனர். உள்­ளக சுய­நிர்­ணய உரி­மையை வழங்­கி­னாலும் அதன் மூலமும் நாடு பிரியும் என்­ப­தனை வலி­யு­றுத்­து­கின்றோம். இவை அனைத்தும் எமக்குத் தெரியும். எவ்­வா­றான சுய நிர்­ணய உரி­மையை வழங்­கி­னாலும் ஆபத்து உள்­ளது எனக் குறிப்பிட்டார்.

வடக்கு மக்கள் அனை­வரும் கூட்­ட­மைப்­புடன் உள்­ள­தாக நாம் கருத முடி­யாது. பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை விட பொது மக்­களே எமக்கு முக்­கி­ய­மா­ன­வர்கள். அந்த மக்கள் தற்­போது எமது பக்கம் வர ஆரம்­பித்­துள்­ளனர். இது இல­கு­வான விட­ய­மல்ல. கடந்த 30 வரு­டங்­க­ளாக பிர­பா­கரன் சயனைட் குப்­பியை காட்டி ஈழம் என்ற கனவைக் காட்டி வந்­தவர். எனவே அந்த மக்­களை உட­ன­டி­யாக எமது பக்கம் திருப்ப முடி­யாது. அதற்கு காலம் தேவை. அத­னையே படிப்­ப­டி­யாக செய்­து­வ­ரு­வதாக தெரிவித்தர்ர.

வடக்கில் வெற்றிபெறுவது எமது நோக்கமாகும். ஆனால் வடக்கு மக்கள் 100 வீதம் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது. எனினும் கணிசமானளவு வாக்குகள் எங்களுக்கு கிடைக்கும். எவ்வாறெனினும் வட மாகாண சபைத் தேர்தல் விடயத்தில் மக்களின் தீர்ப்பு எவ்வாறு அமைகின்றதோ அதனை ஜனநாயக ரீதியில் ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம். மக்களின் தீர்ப்புக்கு நாங்கள் எதிராக செல்ல முடியாது. அதனை ஏற்போம் என்றார் அமைச்சர்.

Via: GTN-

Tags: , , ,

Leave a Reply