போதைப் பொருள் இறக்குமதியின் பின்னணியில் ஆளும் கட்சி அரசியல்வாதிகள்

wijithaஅண்மையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் எத்தனோல் திரவம் ஆகியவற்றின் பின்னணியில் ஆளும் கட்சி அரசியல்வாதிகள் இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சுமத்தியுள்ளது.

இரண்டு கொள்கலன்களில் எத்தனோல் திரவம் மீட்கப்பட்டமை தொடர்பில் இதுவரை குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை கட்சி அலுவலகத்தில் இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவின் அழுத்தத்தின் காரணமாகவே இலங்கை அரசாங்கம் மாகாணசபை தேர்தலை நடத்த தீர்மானித்தது.

தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிய காலம் முதல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிக தேர்தல் வன்முறைகளில் தொடர்புபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் சட்டம், ஒழுங்கு குழியில் விழுந்துள்ளது. ஊழல், மோசடி அதிகரித்துள்ளது. மோசடி செய்பவர்களை அரசாங்கம் பாதுகாக்கிறது.

காலி மேயர் மோசடி குற்றச்சாட்டில் பதவி நீக்கப்பட்டார். ஆனால் கடந்த 23ஆம் திகதி ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளராக அவருக்கு நியமனம் வழங்கி 60,000 ரூபா சம்பளத்துடன் உத்தியோக பூர்வ வாகனமும் வழங்கப்பட்டுள்ளது. மோசடி செய்பவர்களுக்கு உயர் பதவி வழங்கும் நாடு இது.

அரசாங்கம் இன்று இனவாதம், மதவாதத்தை தூண்டி விடுகிறது. தேசிய கொடி பிடித்து இல்லாத பிரச்சினைகளை அரசாங்கம் ஏற்படுத்துகிறது.

ஒருபுறம் தேசியக் கொடி பற்றி கதைத்துக் கொண்டு மறுபுறம் பாலியல், கெசினோ தொழிலை கொண்டு வருகிறது.

இத்தகை கீழ்த்தரமான செயற்பாடுகளுக்குச் சென்று தேர்தல் பிரசாரம் செய்யும் அளவிற்கு அரசாங்கத்தின் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Tags: , , ,

Leave a Reply